புதுச்சேரி காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக பிச்சாண்டவர் கோலத்தில் இருந்த ஈஸ்வரன் கையில் மாங்கனியுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.