இன்னுயிர் காப்போம்- திட்டத்தில் ௪ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்,இத்திட்டத்தின் கீழ் பாரிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 4-வது லட்சம் நபராக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
விழுப்புரம் காந்தி சிலை அருகே அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா அறிவித்ததை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்,
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை ஆலந்தூர் தொகுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இபிஎஸ்சை புலி வேடம் அணிந்து வரவேற்றனர்.இடம்: எம்.ஜி.ஆர். சாலை, நங்கநல்லூர்.
புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சுவாமிக்கு நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பாஸ்கர் எம்எல்ஏ கலந்து கொண்டனர்.
அதிமுக பிரச்சாரத்தில் தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் பொறித்த கொடிகள் மற்றும் புகைப்படங்களை ஆர்வமுடன் வாங்கும் தொண்டர்கள்இடம் தாம்பரம் சண்முகம் சாலை
தாம்பரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த இபிஎஸ். அருகில் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்