அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார லோகோவை சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வெளியிட்டு பத்திரிக்கையாளர் சந்தித்து பேசினார்.
தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் வைபவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.
மெரினா நீச்சல் குளம் அசுத்தம் அடைந்து காணப்படுவதாக தினமலர் நாளிதழ் வந்த செய்தி. சுத்திகரிப்பு பணி முடிந்து தூய்மையாக தண்ணீர் காணப்படுவதால் வெயிலில் குளியல் போடும் இளைஞர்கள்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பூ, பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது .
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் வீர வணக்க நாள் அஞ்சலி சென்னை எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தீயணைப்புத்துறை இயக்குனர் சீமா அகர்வால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.