கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., ரமேஷ்.
ஸ்ரீ தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம் சார்பில், தியாகராஜ சுவாமிகளின் 179 வது ஆராதனை விழா துவங்கியது. இதில், கர்நாடக இசை கலைஞர் டி.வி.எஸ்.மஹாதேவன் இசை கச்சேரி நடந்தது.இடம்: மயிலாப்பூர், சென்னை
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து மோப்ப நாய் ராணி உதவியோடு போலீசார் வெடிகுண்டை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்
புதுச்சேரியில் மார்க் கம்யூ.க்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சோர்வடைந்த போலீசாருக்கு தொண்டர் ஒருவர் கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார்.
பொங்கல் பண்டிைக்கு வீடுகளில் பொங்கல் வைப்பதற்கு மண் பானைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. இடம்: புதுச்சேரி அடுத்த பள்ளி தென்னல்.