தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பாஸ்டோ நகரில் கலாசார ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற, கருப்பு- வெள்ளை பேரணி என்ற விழாவில் கலைஞர்களால் பல மாதங்களாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான காகிதக் கூழ் பொம்மைகள் வீதிகளில் அணிவகுத்து வந்தன.
மேற்குவங்கத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுகாதாரத்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆஷா சுகாதார பணியாளர்கள். இடம்: கொல்கட்டா.
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை துவக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 20 பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதை முன்னிட்டு பட்டினம்பாக்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.