கிரிவலம் முழுவதும் வெயிலில் செல்லும் பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க முதல் கட்டமாக கிரிவலப்பாதை ஈசானிய மைதானத்திலிருந்து அவலூர்பேட்டை சாலை வரைக்கும் கூல் பெயிண்ட் அடிக்கும் பணியை தொடங்கிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள். இடம்: திருவண்ணாமலை.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.