திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் பணியினை கலெக்டர் பழனி துவக்கி வைத்தார். அருகில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி , தாசில்தார் சிவா.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா இறுதி கட்டப் பிரசாரத்தை விருதகிரிஸ்வரர் கோவில் முன்பு பொதுமக்களிடம் பேசி முடித்தவுடன் பாட்டுக்கு துண்டு வைத்து நடனம் ஆடினார்.
பிரசாரம் முடியும் தருணத்தில் தி.மு.க. வேட்பாளர் கருணாஸ் ஆதரவாளர்களுடன் சிவகங்கை மதுரை ரோட்டின் நடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து சென்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பா.ஜ., வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் வடவள்ளி சக்தி காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.