திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை விளாங்குப்பம் பகுதியில் நடந்த பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி மலைவாழ் மக்கள் பெண்களுடன் மாலை உணவு சாப்பிட்டார். உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட பலர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அலுவலக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வந்தார். அவர்களை தடுத்த போலீசார் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் பிரேம் குமார் மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.