ஆசிரியர் தினமான நேற்று தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மேளதாளங்கள் வாசித்து வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் கேக் வெட்டி ஆசிரியர் தின விழாவை கொண்டாடினார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு தேவைப்படும் பொருட்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது. இடம்: பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்.கே.நகர், சென்னை.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில், அதிக பனிப்பொழிவு காரணமாக குளிர் காலங்களில் மூடப்பட்டு கோடை காலங்களில் திறக்கப்படும். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, கேதார்நாத் கோவில் இன்று திறக்கப்பட உள்ளது.
கடும் கோடை வெயிலும், வினியோக நெருக்கடியும் நிலவி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூரில் சமையல் காஸ் சிலிண்டர்களை நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தமிழகம் இதுவரை கண்டிராத அரசியல் வினோதம்…! சென்னையில் நேற்று தன் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு வேனில் திரும்பிய தவெக தலைவர் விஜயை, தவெக, காங், விசி கட்சியினர் கொடியசைத்து வரவேற்று மகிழ்ந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு கூட்ட நெரிசலுக்கு இடையே பயணித்த மக்கள்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா இறுதி கட்டப் பிரசாரத்தை விருதகிரிஸ்வரர் கோவில் முன்பு பொதுமக்களிடம் பேசி முடித்தவுடன் பாட்டுக்கு துண்டு வைத்து நடனம் ஆடினார்.
பிரசாரம் முடியும் தருணத்தில் தி.மு.க. வேட்பாளர் கருணாஸ் ஆதரவாளர்களுடன் சிவகங்கை மதுரை ரோட்டின் நடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து சென்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.