சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி இந்தோ தீபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களுக்கு வழி அனுப்பும் விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஐ.ஜி.நிர்பாய் சிங் மற்றும் டி.ஐ.ஜி. ஆச்சல் சர்மா ஏற்றுக் கொண்டனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.