பா.ஜ., கட்சி மாநில, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை, திருப்பூர் கணக்கம்பாளையம் கிருஷ்ணா மகாலில் நடந்தது. அதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அருகில் மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணை தலைவர் நயினார் நாகேந்திரன்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.