வேலூர் மாவட்டம் காட்பாடி சேனூர் ஜி.என் நகரில் கட்டப்பட்டு வரும் நியாய விலை கடை கட்டட பணியை தடுத்து நிறுத்திய பொது மக்கள், அதனை ஊர் மத்தியபகுதியில் கட்ட கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த குஷ்பூவை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொண்டர்கள்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.