மின் ஒயர்களை கடற்கரை பகுதியில் தீயிட்டு கொளுத்துகின்றனர் . இதனால் கரும்புகை சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இடம்: திருச்சினாங்குப்பம் சந்திப்பு, திருவொற்றியூர்.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.