தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டி நிகழ்ச்சியில் பெற்றோர்களுடன் கலந்துகொண்ட மாணவ - மாணவியர்கள்.இடம்: தாம்பரம்.
திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு பதிவு, திருப்பூர் டவுன்ஹாலில் நடந்தது. தபால் ஓட்டு செலுத்த வரிசையில் காத்திருந்த போலீசார்.
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். இடம்: காந்திபார்க், கோவை.
ஓட்டு சாவடியில் மாற்று திறனாளிக்கு உதவும், கல்லூரி மாணவிகளுக்கு, வீல் சேர் பயன்படுத்தும் முறை குறித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.