திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில் சேதமான நிலையில் கட்டடங்கள் உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் எந்நேரமும் பதற்றத்திலேயே பணிபுரியும் நிலை உள்ளது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.