தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் கலையும் கைவண்ணமும் என்ற கோடைகால இலவச ஓவியம் வரைதல் மற்றும் ஆபரண தயாரிப்பு பயிற்சி வகுப்பு கணபதியிலுள்ள ஜெம் நிர்மாலயம் ரெசிடென்சில் நடந்தது. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பெண்கள்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.