வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் இணைப்பு பாதை திட்டத்திற்கான அமைக்கப்படுள்ள மேம்பாலத்தின் தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ண, வண்ண ஓவியங்கள் வாகன ஓட்டிகள், பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.இடம்: ஆதம்பாக்கம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அலுவலக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வந்தார். அவர்களை தடுத்த போலீசார் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் பிரேம் குமார் மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.