லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வின் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு தொண்டர்கள் சார்பில் சாக்லேட் மாலை அணிவிக்கப்பட்டது.இடம்: எம்.ஜி.ஆர்.நகர்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.