காங் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், காங்., தேவதாஸ், வினோத்,
இந்திய கடற்படை சார்பில், போதைப்பொருள் புழக்கம், ஆன்லைன் சூதாட்டம்' போன்றவற்றை கைவிடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'மினி மாரத்தான்' போட்டி நடந்தது. அதில் பங்கேற்றவர்கள். இடம்: காமராஜர் சாலை, சென்னை.
மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் பழுதடைந்ததால், அதை இடித்து அகற்றும் பணி தொடங்கி நடக்கிறது. ராட்சத கிரேன்களின் உதவியுடன் நடக்கும் பணியால் மேம்பாலத்துக்கு கீழே ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தமிழக மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை சிறப்பிக்கும் வகையில், நினைவு தபால் தலையை வெளியிட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர். இடம்: புதுடில்லி.
வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஹசி படித்துறையில் அமர்ந்திருந்த சாதுவிடம் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் உரையாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணியர்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் 'காசி தமிழ்ச் சங்கமம்- 4.0' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற தமிழக குழுவினருக்கு பறை இசைத்து அளிக்கப்பட்ட வரவேற்பு.