திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழுப்புரம் லோக்சபா தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து மாவட்ட மகளிர் அணி அங்காளம்மன், பாரத மாதா, மற்றும் ஜோசியம் பார்ப்பது போல் வேடம் அணிந்து ஓட்டு சேகரிக்க வந்தனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தொகுதி வேட்பாளருமான வேலுமணியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி வழங்கப்பட்டது