ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் கேட்டு,நிலக்கடலை பயிர் உடன் விவசாயிகள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு பதிவு, திருப்பூர் டவுன்ஹாலில் நடந்தது. தபால் ஓட்டு செலுத்த வரிசையில் காத்திருந்த போலீசார்.
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். இடம்: காந்திபார்க், கோவை.
ஓட்டு சாவடியில் மாற்று திறனாளிக்கு உதவும், கல்லூரி மாணவிகளுக்கு, வீல் சேர் பயன்படுத்தும் முறை குறித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.