
திருப்பூரில் 1191 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்டம் துவக்க விழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, செய்தி மக்கள் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், தெற்கு எம் எல் ஏ செல்வராஜ், எம்.பி சுப்பராயன் ஆகியோர் உடனிருந்தனர்.
11-Feb-2024
இன்றைய போட்டோ13-Apr-2026
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் இணைப்பு மேம்பாலம், உள்வாங்கியது. இன்டர் லாக் முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதுடன், முதல் கட்டமாக சுமார் 240 அடி தூரம், சாலை ஒட்டுமொத்தமாக பெயர்ந்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.
13-Apr-2026
5/இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை
13-Apr-2026




