மஹாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு கவர்னர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் சாமிநாதன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
புதுச்சேரியில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து தபால் ஓட்டுகளை போட்டனர். உப்பளம் தொகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ஓட்டை போட்ட காட்சி.