
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஶ்ரீ ராம் ஜென்ம பூமி க்ஷேத்ர பிரதிஷ்ட திருவிழா கொண்டாட்டத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது இதில் திருப்பதி தேவஸ்தான வளாகத்தில் பிரம்மாண்ட ஶ்ரீ ராமர் சிலையை ராம் ஜென்ம பூமி க்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் பரசரன் திறந்து வைத்தார் உடன் இடமிருந்து தினமலர் திருச்சி, வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் கோபால் ஜி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம், ஆன்மீக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன்,திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் தலைவர் சேகர் ரெட்டி.இடம் : தி நகர்.
03-Jan-2024
இன்றைய போட்டோ13-Apr-2026
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் இணைப்பு மேம்பாலம், உள்வாங்கியது. இன்டர் லாக் முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதுடன், முதல் கட்டமாக சுமார் 240 அடி தூரம், சாலை ஒட்டுமொத்தமாக பெயர்ந்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.
13-Apr-2026
8/இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை
13-Apr-2026







