மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரின் லால்பாக்சா பகுதி ராஜாவாக போற்றப்படும் ''லால்பாக்சா ராஜா விநாயகர் சதுர்த்தி நாளான, அரண்மனை போன்று அமைக்கப்பட்ட பந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கோவை ரேஸ்கோர்ஸ் சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் ஸ்வீட் ஸ்டாலில் 73 கிலோ எடை கொண்ட விநாயகர் லட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூர் சந்திராபுரம் இந்திரா நகர் பகுதியில் சாரட் வண்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்.