/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவிலில் சிருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள்
/
நொய்டா கோவிலில் சிருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள்
நொய்டா கோவிலில் சிருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள்
நொய்டா கோவிலில் சிருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள்
நவ 26, 2025

நொய்டா கோவிலில் சிருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள்
புதுடில்லி: சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் புனித ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் நவம்பர் 26, புதன்கிழமை அன்று நொய்டாவில் உள்ள செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயிலுக்குச் தனது 'விஜய்' யாத்திரையின் போது வந்திருந்தார்.
மேலும், 'வளர்பிறை சஷ்டி நாளான' புதன்கிழமை கோவிலுக்கு வருகை தரும் போது, ஸ்ரீ கார்த்திகேயருக்கு தனது சொந்த கைகளால் சிறப்பு அபிஷேகமும் செய்தார். அவருக்கு பூர்ண கும்பம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை 150 க்கும் மேல் பெண்கள் குழு பாராயணம் செய்து வரவேற்றனர். கோவிலில் உள்ள மற்ற சன்னதிகளுக்கும் தரிசனம் செய்தார். 'வில்வ மரம்' கோவில் வளாகத்தில் நடவும் செய்தார். அன்றைய நிகழ்ச்சி தெய்வீக பிரார்த்தனை பாடலுடன் தொடங்கியது. அதே நேரத்தில் சன்ஸ்தான் தலைவர் வரவேற்பு உரையை வழங்கினார். அவரது புனித அனுகிரஹ பாஷாணம் கேட்பதற்கு 500க்கும் மேல் பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிருங்கேரி (கர்நாடகா) மனதில் வைத்துக்கொண்டு, கோவில் நிரவாகம் பக்தர்களுக்கு மகா பிரசாதமாக போளி, பிசி பேலா பாத், தயிர் சாதம் விநியோகம் செய்தனர். கோவில் நிர்வாகம் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறியது மட்டுமல்லாமல், டில்லி சங்கர வித்ய கேந்த்ரா உறுப்பினர்களின் தயவுடன் மிக சிறப்பாக நடந்தது என தெரிவித்துக் கொண்டது
-டில்லியில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்
