/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
டில்லி ரோகிணி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் சாஸ்தா பிரீதி
/
டில்லி ரோகிணி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் சாஸ்தா பிரீதி
டில்லி ரோகிணி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் சாஸ்தா பிரீதி
டில்லி ரோகிணி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் சாஸ்தா பிரீதி
நவ 24, 2025

நவம்பர் தொடங்கிவிட்டாலே பல இடங்களிலும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' எனும் பக்தி கோஷம் ஐயப்பப் பஜனைக் கூட்டங்களில் களைகட்டும் கார்த்திகை மாதம் தொடங்கி 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து சபரிமலை சென்று 18 படிகளில் ஏறி நேர்த்தி செலுத்துவதை லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாக்கியமாகக் கொள்வர்.
இதில் குறிப்பாக சாஸ்தா ப்ரீதி என்பது தர்ம சாஸ்தாவை மகிழ்விப்பதற்கான ஒரு பூஜை அல்லது வழிபாடாகும், இது கேரளாவில் தொடங்கி தற்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையில், அன்னதானம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இது ஐயப்ப வழிபாட்டை விட வித்தியாசமான, தனித்துவமான வழிபாட்டு முறையாகும்.
வட மேற்கு டில்லி பகுதியில் உள்ள ரோகிணியில், 7வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நவ-23) காலை சாஸ்தா ப்ரீதி வைபவம் மிகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வடமேற்கு டில்லி கலாச்சார சங்கம் செய்திருந்தது. சாஸ்தா ப்ரீதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ரோகிணியை சார்ந்த ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் அன்பர்கள்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். பிறகு மஞ்சப்ர மோகன் குழுவினரின் ஸ்ரீ ஐயப்பன் அவதார ஸ்லோகம், வரவு பாட்டு, ஆவேசப் பாட்டுகளுடன் பஜனை சிறப்பாக நடைபெற்றது. அவரது சாஸ்தா ப்ரீதி பஜனை பாடல்கள் அவரது ரசிகர்களிடையே, குறிப்பாக டெல்லியில் உள்ளவர்களிடையே பிரபலமாக உள்ளன. ஐயப்பன் பற்றிய அவரது பாடல்கள் தெய்வீக சூழலை உருவாக்குகின்றன. அய்யப்ப பக்தர்கள் இதில் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஜயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் நுனி வாழை இலையில் அன்னதானம் பரிமாறினர்.
சாஸ்தா ப்ரீதி: தர்ம சாஸ்தாவிற்கு செய்யப்படும் ஒரு சிறப்பு வழிபாடு.
தோற்றம்: முதலில் கேரளாவில் நடத்தப்பட்டாலும், இப்போது நாடு முழுவதும் பரவலாக உள்ளது.
முக்கியத்துவம்: அன்னதானத்திற்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வழிபாட்டு முறை: மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, வேத கோஷங்களுடன் சாஸ்தாவை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டது.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
