/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
டில்லி மயூர் விகாரில்(1) கணேஷ் சதுர்த்தி வைபவம்
/
டில்லி மயூர் விகாரில்(1) கணேஷ் சதுர்த்தி வைபவம்
செப் 01, 2025

கிழக்கு டில்லி மயூர்விகார்(1) சுப சித்தி விநாயகர் கோவிலில் கணேஷ் சதுர்த்தி வைபவம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது .இந்த விழாவின் நிறைவை ஒட்டி பிள்ளையார் வீதி வலம் வரும் நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
அன்றைய தினம் காலை மூலவர் கணபதிக்கு அபிஷேகம்.அடுத்து அதர்வ சீர்ஷஹோமம் நடைபெற்றது.சனிக்கிழமையானதால் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து கணபதி சகஸ்ரநாமம் ஜபிக்கப்பட்டு பூர்ணாகுதியுடன் ஹோமம் நிறைவு பெற்றது.கலசங்கள் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.காலை நிகழ்வுகள் அன்னதானத்துடன் முடிவுற்றது.
ஆரவார ஆட்டம்
மாலையில் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பிள்ளையார் ஊர்வலம் வந்தார்.சுவாமி கோவிலை வந்து சேரும் கோலாகலம் காணவேண்டிய காட்சி.அவரை வரவேற்க பரத கலைஞர் வாசுதேவனின் நடனம் ஆத்மார்த்தமான ஸ்வாகதம். ஆரத்திக்குபிறகு பிள்ளையார் கோவினுள் வந்து சந்நிதி முன்பு நாதஸ்வரம் முழங்க அவரை விதவிதமாய் தாலாட்டி , ஆரவார ஆட்டம் ஆடி மகிழ்ந்து கீழே இறக்கினார்கள்.
வந்த கூட்டமெல்லாம் அங்கங்கே பிரகாரத்தில் கும்மி பாம்பாட்டம் தட்டாமாலை சுற்றி விதவிதமாக ஆடி களித்து வைபவத்தை நிறைவு செய்தார்கள். பக்தர்கள் கூட்டத்தில் பிள்ளையார் மகிழ்ந்தாரா இல்லை பக்தர்கள் பிள்ளையாரை கொண்டாடி மகிழ்தாரா என் சொல்லும்படி சிறப்பான நிறைவு. ஞாயிறு காலை சித்தி புத்தி விவாகம் பஜனை பந்ததியில் மணி பாகவதர் குழுவினர் நடத்தி வைத்தார்கள். கல்யாண வைபவத்துடன் கணேச சதுர்த்தி கொண்டாட்டம் நிறைவுபெற்றது
--- நமது செய்தியாளர், மீனா வெங்கி.