/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் சாஸ்திரிய சங்கீத சங்கமம்
/
அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் சாஸ்திரிய சங்கீத சங்கமம்
அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் சாஸ்திரிய சங்கீத சங்கமம்
அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் சாஸ்திரிய சங்கீத சங்கமம்
செப் 06, 2025

அயோத்தியில் உள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் சுவிட்சர்லாந்தை சார்ந்த இந்திய பாரம்பரிய பாடகி உமா குமாரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு கர்நாடக கீர்த்தனைகள் மற்றும் பஜனை பாடல்களை பாடினார்.
ராஜீவ் பாண்டே (பக்கவாஜ்) ராஜ்குமார் ஜா (தபேலா) மற்றும் பண்டிட் குஷால் உபாத்யாய் (ஹார்மோனியம்) ஆகியோர் பங்கேற்று பக்க வாத்தியம் வாசித்தனர். அயோத்தியைச் சார்ந்த உள்ளூர்வாசிகளும் மற்றும் இசை ஆவலர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அயோத்தி மேயர் உள்ளிட்ட பிற பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அயோத்தியுடன் கூடிய ஸ்ரீ ஆச்சார்யாளின் தெய்வீக பிணைப்பை அனைவரும் அன்புடன் நினைவு கூர்ந்தனர்.
காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகராஜ்
ஸ்ரீ காஞ்சி மடத்தின் அயோத்தி கிளை, அயோத்தியில் உள்ள பிரமோத்பவன் பகுதியில் அமைந்துள்ளது. அயோத்தி கிளையை ஒட்டிய சாலைக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகராஜ் என்ற பெயர் சமீபத்தில் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
--- நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன், புதுடில்லி.