
புதுடில்லி; பெளர்ணமியை ஒட்டி, புதுடில்லி ஆர்.கே.புரம், செக்டார் 1-ல் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில், உலக நன்மை வேண்டி, ஸ்ரீ ஆர். ஆனந்த் சாஸ்திரிகள் தலைமையில் காலை சண்டி ஹோமம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று பூஜையில் ஈடுபட்டனர். பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சண்டி ஹோமம்
சண்டி ஹோமம் என்பது தேவி சண்டிகாவின் ஆசீர்வாதத்தைப் பெற செய்யப்படும் ஒரு சக்தி வாய்ந்த ஹோமம். இது துர்கா தேவியின் பல்வேறு வடிவங்களான மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகியோரின் அருளையும் ஒருங்கே பெற உதவுகிறது. இந்த ஹோமத்தின் முக்கிய நோக்கம், தீய சக்திகளை அழித்து, பக்தர்களுக்கு ஆற்றல், வலிமை, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதோடு, தடைகளை நீக்கி, எதிரிகளை வெல்வதுமாகும்.
- நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன், புதுடில்லி.