/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
டில்லி கோயில்களில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்
/
டில்லி கோயில்களில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்
ஆக 26, 2025

புதுடில்லி: டில்லியில் பல்வேறு கோயில்களில் சாம வேத உபாகர்மாவின் ஆவணி அவிட்டம் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.
சாம வேத உபாகர்மா
இன்று காலை மகா சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சவ்யம், பிரம்ம யக்ஞம், ரிஷி பூஜை, தர்ப்பணம், கண பூஜையுடன் சாம வேத உபாகர்மா (ஆவணி அவிட்டம்) மிகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அரிசி, தேங்காய், புஷ்பம், பழம், வெற்றிலை பாக்கு, நெய், எள், பஞ்சபாத்திர உத்தரணியுடன் பங்கேற்றனர். உலக நலன், சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி ஆகியவற்றுக்காக பிராத்தனை செய்து ஏராளமானோர் பூணூல் மாற்றினர். தொடர்ந்து வேத ஆரம்பம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா விபரம் பின்வருமாறு :
ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா
ஸ்ரீ சரவண சாஸ்திரிகள் தலைமையில் நடந்தது. நூரணி என்.பி. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு உதவியாக சபையில் இருந்தார்.
ஸ்ரீ காமாட்சி மந்திர், அருணா அசப் அலி சாலை
ஸ்ரீ ராஜசேகர் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமானோர் பூணூல் மாற்றி கொண்டனர்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையம், 1வது செக்டார், ஆர்.கே.புரம்
ஸ்ரீ கே. சங்கர் ஷ்ரௌதிகள் தலைமையில் நாற்பத்திற்கும் மேலானோர் பங்கேற்று பூணூல் மாற்றி கொண்டனர்.
சாமவேத பாரம்பரியம் பின்பற்றுபவர்களால் கடைப்பிடிக்கப்படும் இந்தச் சடங்கு, வேதங்களைப் படிப்பதில் மற்றும் ஓதுவதில் தங்கள் அர்ப்பணிப்பை புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாகும்.
பண்டைய சாம வேத பாரம்பரியம்
சாமவேத உபாகர்மாவின் புனித நாளில், பிராமணர்கள் தங்கள் புனித உபநயன நூலை ஷ்ரௌத சடங்குகளுடன் சடங்கு முறையில் மாற்றுகிறார்கள். இது ஒரு பண்டைய வேத பாரம்பரியமாகும், இது பிராமண சாதியைச் சேர்ந்த இந்துக்களால் இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த சடங்கு ஆன்மிக அர்ப்பணிப்பு மற்றும் பக்தியின் புதுப்பிப்பைக் குறிக்கிறது.---நமது செய்தியாளர், எம்.வி. தியாகராஜன்.