பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம்: ரஷ்ய அதிபர் புடின்
பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம்: ரஷ்ய அதிபர் புடின்
UPDATED : ஆக 31, 2025 05:45 PM
ADDED : ஆக 31, 2025 08:23 AM

தியான்ஜின்: ''ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன'' என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றுள்ளார். முன்னதாக, புடின் கூறியதாவது: பிரிக்ஸ் அமைப்பு உலகளாவிய அளவில் முக்கிய அமைப்பு வகிக்கிறது. உலகளாவிய நிதி நிறுவனங்களில் சீர்திருத்தங்களை ஆதரிப்பதிலும் பிரிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
சீனாவுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், சர்வதேச பாதுகாப்பு குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுக்கவும், பிரிக்ஸ் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.
சீனாவுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து மனித குலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்தை நாங்கள் நாடுகிறோம். இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.