கனடா இந்திய நடிகர் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு
கனடா இந்திய நடிகர் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு
ADDED : ஆக 08, 2025 01:45 AM
ஒட்டாவா: காமெடி நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான கனடாவில் உள்ள உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது. கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக நடந்த துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கபில் சர்மா. நகைச்சுவை நடிகர், டிவி தொகுப்பாளராக உள்ளார். தனியார் ஹிந்தி டிவி சேனல்களில் இவருடைய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை.
இவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேவில், சில மாதங்களுக்கு முன் புதிதாக உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணகவம் மீது கடந்த ஜூலை 9ம் தேதி மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்துக்கு இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், இந்த உணவகத்தின் மீது, நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து, 25 முறை துப்பாக்கியால் சுட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.