டிசம்பரில் இந்தியா வருகை; சீனாவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ரஷ்ய அதிபர் புடின்!
டிசம்பரில் இந்தியா வருகை; சீனாவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ரஷ்ய அதிபர் புடின்!
ADDED : ஆக 29, 2025 10:30 PM

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறார். சீனாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவிற்கான வருகை குறித்து விவாதிப்பார் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறார். சீனாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவிற்கான வருகை குறித்து விவாதிப்பார் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்திய இறக்குமதிக்கு வரி விதித்தார். இதனால் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு வலுவடைகிறது. சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புடின் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
சீனாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவிற்கான வருகை குறித்து விவாதிப்பார். புடின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறார் என கிரெம்ளின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்து உள்ளார்.
ரஷ்யா- இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்த பிறகு, டிசம்பரில் புடின் இந்தியா வருகை தர உள்ளார்.
அப்போது முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் புடினின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.