ADDED : ஆக 15, 2025 12:17 AM
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 78வது சுதந்திர தின விழாவில் உரையாற்றுகையில், 'ராணுவத்தில் புதிதாக ஏவுகணை படை உருவாக்கப்பட்டுள்ளது' என அறிவித்தார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று முன்தினம் இரவு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை, ஏவுகணை படை உள்ளிட்டவை குறித்து பேசினார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது:
நம் ராணுவத்தில் புதிதாக ஏவுகணை படை என்ற தனி படைப் பிரிவு உருவாக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்பட உள்ள இந்த படை, போர்த் திறனை வலுப்படுத்துவதில் ஒரு மைல்கல்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மே மாதம் நடந்த மோதலில் நமக்கே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. நான்கு நாட்களில் இந்தியாவின் ஆணவத்தை தகர்த்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.