'இணைந்து செயல்படுவோம்': இந்தியாவுக்கு அமெரிக்கா வாழ்த்து
'இணைந்து செயல்படுவோம்': இந்தியாவுக்கு அமெரிக்கா வாழ்த்து
UPDATED : ஆக 16, 2025 06:39 PM
ADDED : ஆக 16, 2025 12:29 AM

வாஷிங்டன்: நவீன சவால்களை எதிர்கொண்டு, இந்தியா - அமெரிக்காவுக்கான பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்' என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நம் நாட்டின் சுதந்திர தினத்துக்கான வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியமானது.
நம் இரு நாடுகளும், இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்கு பொதுவான தொலைநோக்கு உடன் ஒன்றிணைந்துள்ளோம். நம் உறவு தொழில்துறை, புதுமையான கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு என பல துறைகளில் பரவியுள்ளது.
இணைந்து செயல்படுவதன் மூலம், அமெரிக்காவும் இந்தியாவும் இன்றைய நவீன சவால்களை எதிர்கொண்டு, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.