பாக்.,ல் பெண் டாக்டர் ஆணவக் கொலை காதலை கைவிட மறுத்ததால் தம்பி ஆத்திரம்
பாக்.,ல் பெண் டாக்டர் ஆணவக் கொலை காதலை கைவிட மறுத்ததால் தம்பி ஆத்திரம்
ADDED : ஆக 15, 2025 02:04 AM
லாகூர்:பாகிஸ்தானில் காதலை கைவிட மறுத்த பெண் டாக்டரை தம்பியே ஆணவக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூருக்கு அருகே உள்ள டோபா டெக் சிங் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பீபி, 24. இவர், சமீபத்தில் தான் எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பை முடித்து கிர்கிஸ்தானிலிருந்து நாடு திரும்பினார்.
கடந்த வாரம், ஆயிஷா பீபியை சொந்த தம்பியே சுட்டுக் கொன்றார். வீட்டில் உணவு சமைக்காதது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதால் தம்பி உமைர் சுட்டதாக ஆயிஷாவின் தந்தை போலீ சாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து உமைரை கைது செய்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். ஆயிஷா, டாக்டர் ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததுடன் காதலை கைவிடும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அதை கேட்காத ஆயிஷா காதலரை சந்தித்து பேசிவிட்டு வந்ததால் ஆணவக் கொலை செய்ததாக உமைர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.