ADDED : ஆக 29, 2025 03:22 PM

ரியாத்: சவுதி அரேபியாவின் அல் கசீம் மண்டல புக்கேரியாவில் வேலை பார்த்து வந்தவர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி இவர் கடந்த 13 ஜூலை 2025 அன்று இறந்தார்.
இந்த செய்தி இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அல் கசீம் மண்டலத் தலைவர் மங்களக்குடி முஹைதீனுக்கு இறந்தவரின் குடும்பத்தினர் வாயிலாகவும், துபாயிலிருந்து சமூக செயல்பாட்டாளர்கள் மூலமாகவும், அதே நிறுவனத்தில் பணியாற்றும் அந்தோனிராஜ் தகவல்களாலும் கிடைத்தது.
இதையடுத்து உடலை தாயகம் அனுப்புவதற்கான அனைத்து சட்ட, ஆவண மற்றும் தேவையான பணிகளை இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் முன்னெடுத்தது.
இந்த முயற்சியில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் அந்தோனிராஜ், நிறுவனத்தினர் மற்றும் ரியாத் இந்தியத் தூதரக ஒத்துழைப்புடன் பணிகள் முடிந்து, நேற்று விமானம் மூலம் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகத்தினருக்கு, உடலை பெற்றுக்கொண்ட வேலுச்சாமியின் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.