ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீரர் அனிஷ் வெள்ளி வென்றார்
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீரர் அனிஷ் வெள்ளி வென்றார்
ADDED : ஆக 27, 2025 04:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
16-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது.இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு, பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இதில், 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டர் பிரிவில் இந்தியாவின் 22 வயதான அனிஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார். சீனாவின் சூ லியான்போவன் தங்கத்தையும், கொரியாவின் லீ ஜேகியோன் வெண்கலத்தையும் வென்றனர்.
இதுவரையில் இந்தியா 39 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.