5 மாதங்களில் 5 போர்களை நிறுத்திவிட்டேன்; டிரம்ப் தம்பட்டம்
5 மாதங்களில் 5 போர்களை நிறுத்திவிட்டேன்; டிரம்ப் தம்பட்டம்
ADDED : ஆக 06, 2025 08:53 AM

வாஷிங்டன்: 5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தி இருக்கிறேன். இதில் இந்தியா, பாக். போரும் அடக்கம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. சண்டை உச்சத்தை எட்டிய நிலையில் இருநாடுகளும் பரஸ்பரம் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
ஆனால், இந்தியா, பாக் சண்டையை தலையிட்டு நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். பலமுறை இதுபோன்ற அறிவிப்பை டிரம்ப் வெளியிட மத்திய அரசு தரப்பில் அதற்கும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில்,
கடந்த ஐந்து மாதங்களில் நான் ஐந்து போர்களை நிறுத்தினேன். இது ஆறாவது முறையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உக்ரைன் போர், பைடனின் போர்.
இந்தியா பாக் போரையும் நிறுத்தி உள்ளேன். முழு பட்டியலையும் மேலோட்டமாகப் பார்க்க முடியும். ஆனால் அந்தப் பட்டியல் என்னைப் போலவே உங்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றார்.