இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டதா: டிரம்ப் குருட்டு விமர்சனத்திற்கு ஆதரவாக உருட்டுகிறார் ராகுல்!
இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டதா: டிரம்ப் குருட்டு விமர்சனத்திற்கு ஆதரவாக உருட்டுகிறார் ராகுல்!
UPDATED : ஆக 06, 2025 09:35 AM
ADDED : ஆக 06, 2025 09:34 AM

இந்திய பொருளாதாரத்தை 'இறந்த பொரு ளாதாரம்' என, விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குருட்டு விமர்சனத்துக்கு ஆதரவான கருத்தை தன் பங்கிற்கு உருட்டிவிட்டிருக்கிறார், காங்., எம்.பி., ராகுல்.
ஆனால், உண்மையில் இந்திய பொருளாதாரம் சிறந்த நிலைத் தன்மையுடன், வளர்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண் டிருப்பதாக கூறுகிறார், விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன்.
மேலும் அவர் கூறியது:
* நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, வரி வசூல் சாதனை யாக முதன் முறை யாக கடந்த ஆண் டில்தான், ஜி.எஸ். டி., 270 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வசூலாகியுள்ளது.
* அதிகபட்சமாக 2.5 கோடி வாகனங்கள் விற்றுள்ளன.வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10.4 கோடியாக அதிகரித்துள்ளது.
* உற்பத்தித் துறையின் பி.எம்.ஐ., குறியீடு 59.20 புள்ளிகளாக உயர்ந்துள்ளன.
* வெளிநாட்டு ஏற்று மதி 325 பில்லியன் டாலர் மதிப்பிற்கு நடந்துள்ளது.அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு 704 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
* புதிதாக 4.6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* அதிகபட்சமாக சென் செக்ஸ் 85,900 புள்ளிகள் எட்டியது.
* பிரிட்டன் உடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு பயன்.
* தாராள வர்த்தகம் தான் வறுமையை ஒழித்து வளம் பெறச் செய்யும், என்றார்.