சென்னை -திருச்சி இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் 68 பேர் அவதி
சென்னை -திருச்சி இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் 68 பேர் அவதி
ADDED : ஆக 06, 2025 09:38 AM

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 68 பேர் கடும் அவதி அடைந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு 68 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் உட்பட 73 பேரை ஏற்றிக் கொண்டு இன்று காலை காலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.
உடனடியாக விமானியை நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.பின்னர் விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்தபோது விமானப் பொறியாளர்கள் சிக்கலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பழுதுபார்ப்பு ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது, மேலும் விமானம் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு பிரச்னை ஏற்பட்டு வருவது, பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.