sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவு அவசியம்: நிக்கி ஹாலே

/

சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவு அவசியம்: நிக்கி ஹாலே

சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவு அவசியம்: நிக்கி ஹாலே

சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவு அவசியம்: நிக்கி ஹாலே

14


UPDATED : ஆக 21, 2025 01:42 PM

ADDED : ஆக 21, 2025 01:34 PM

Google News

14

UPDATED : ஆக 21, 2025 01:42 PM ADDED : ஆக 21, 2025 01:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்'' என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீதான பொருட்களுக்கு மீது 25 சதவீத வரியும், 25 சதவீத அபராத வரியும் அதிபர் டிரம்ப் விதித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவை சேர்ந்த பல பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த வகையில் அதிபர் டிரம்ப் அதிக வரி விதிப்பிற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான நிக்கி ஹாலேவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர், முதல் முறை அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது ஐநாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றியவர்.

இது குறித்து நிக்கி ஹாலே கூறியதாவது: இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது.சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம். இந்தியா டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு தீர்வு காண அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியா, சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல. டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய, அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானவை. ஜவுளி, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகளை சீனா போன்ற அளவில் உற்பத்தி செய்யும் திறனில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் சக்தி வளரும்போது சீனாவின் வளர்ச்சி குறைந்து விடும். இவ்வாறு நிக்கி ஹாலே கூறியுள்ளார். டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த நிக்கி ஹாலே, ''அமெரிக்காவுக்கு இந்தியாவின் உறவு மிக அவசியம்'' என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us