அமெரிக்க ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு இருக்கலாம் என அச்சம்
அமெரிக்க ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு இருக்கலாம் என அச்சம்
UPDATED : ஆக 06, 2025 10:45 PM
ADDED : ஆக 06, 2025 10:44 PM

ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ஸ்டீவர்ட் கோட்டை உள்ளது. இது ராணுவ முகாமாக செயல்படுகிறது. அங்கு ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என 10 ஆயிரம்பேர் தங்கி உள்ளனர்.
இங்கு அந்நாட்டு நேரப்படி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த கோட்டையை மூடிய அதிகாரிகள், யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழப்பு இருக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உயிருடன் உள்ளே உள்ளதால், அவரை பிடிக்க பாதுகாப்பு படையினர் முயன்று வருகின்றனர். முதற்கட்டமாக 5 ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.