சீனாவில் ரயில் மோதி தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழப்பு
சீனாவில் ரயில் மோதி தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழப்பு
ADDED : நவ 27, 2025 05:26 PM

பீஜிங்: சீனாவில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட ரயில் மோதியதில் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்புகளை கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு ரயில் விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் என்ற இடத்தில் இன்று(நவ.,27)ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. தண்டவாளத்தில் ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது சோதனை ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்ததும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 55 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்ததாக ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

