விஜயின் தராதரம் அவ்வளவு தான்; தேர்தலில் மக்கள் பதில் சொல்வர்: அமைச்சர் நேரு
விஜயின் தராதரம் அவ்வளவு தான்; தேர்தலில் மக்கள் பதில் சொல்வர்: அமைச்சர் நேரு
ADDED : ஆக 22, 2025 01:29 PM

திருச்சி: ''முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த விஜயின் தராதரம் அவ்வளவு தான். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு முதல்வர் ஸ்டாலினை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல்'' என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது பற்றி கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அவரது தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதல்வர், பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார்.
நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு, அவர் அதுமாதிரி சொல்வது எல்லாம், தரம் தாழ்ந்த விமர்சனம் செய்கிறார். மக்கள் அதுக்கு நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் அதற்கு நல்ல பதில் சொல்வோம். அதில் எல்லாம் ஒன்றும் மாற்றமில்லை. 10 பேர், 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக மாநில முதல்வரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எவ்வாறு சரியாக இருக்கும்? இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.