sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அறியாமையில் பேசுகிறார்கள்: விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

/

அறியாமையில் பேசுகிறார்கள்: விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

அறியாமையில் பேசுகிறார்கள்: விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

அறியாமையில் பேசுகிறார்கள்: விஜய்க்கு இபிஎஸ் பதிலடி

15


UPDATED : ஆக 21, 2025 10:30 PM

ADDED : ஆக 21, 2025 08:28 PM

Google News

15

UPDATED : ஆக 21, 2025 10:30 PM ADDED : ஆக 21, 2025 08:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : '' சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள், பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள், '' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், '' எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எப்படி இருக்கிறது என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?'' எனப் பேசியிருந்தார்.

அறியாமை




இந்நிலையில், காஞ்சிபுரத்தில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் இபிஎஸ் பேசியதாவது: யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள், பாவம் அறியாமையில் பேசுகிறார்கள்.

இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்? நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிவருகிறார்கள். மரம் உடனே வளராது, செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூப்பூத்து காய்காய்க்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது.

அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என நிறைய கல்லூரிகளை துவக்கினோம்.

புரிந்துகொவீர்கள்




அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள். மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். 1976 முதல் உழைப்பால் உயர்ந்து உங்கள் முன் நிற்கிறேன். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. ஏனெனில், உழைப்புதான் நிரந்தரம். இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

ஆனால் அவர்கள் சாதித்தது என்ன? எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்ஜிஆர், அண்ணாதுரை, ஜெயலலலிதா எல்லோரும் எடுத்ததுமே முதல்வர் ஆகவில்லை. மக்கள் நன்மதிப்பைப் பெற்றபின்னர்தான் முதல்வராக வர முடிந்தது.

மற்றவர்களைப் போல திரைப்படங்களில் நடித்து அதன்மூலம் வருமானத்தைப் பெற்று, ஓய்வுபெறும் காலத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலை கிடையாது. ஒரு திரைப்படத்தில் நடித்தவுடனே ஹூரோ ஆகமுடியாது, பல படத்தில் நடித்த பிறகே ஸ்டார் ஆக முடியும். சினிமாவிலே அப்படி என்றால் அரசியலில் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

ஊழல்


இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: “சில பேர் புதிதாக கட்சியைத் தொடங்கி இரண்டாவது மாநாடுதான் நடத்தியிருக்காங்க, அது ஒன்றரை வயதுக் குழந்தை. இது, அதிமுக எழுச்சி பயணத்தில் 105வது கூட்டம். இதுவே மாநாடு போல் காட்சியளிக்கிறது. இரண்டு மாநாட்டுக்கே இப்படி என்றால், ஜூலை 7ம் தேதி தொடங்கி 105 எழுச்சி மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். அதிமுக அத்தனை மக்கள் செல்வாக்குள்ள இயக்கம்.
எனவே, அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். நாங்கள் மக்களை சந்திக்கிறோம் என்றால், எம்ஜிஆர், ஜெயலலிதா நாட்டை ஆண்டார்கள். அவர்கள் மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆண்டோம். இப்படி 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சி புரிந்திருக்கிறது.இன்னும் ஒருமுறை கூட எம்.எல்.ஏ ஆகவில்லை, ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைபடுவது தவறல்ல. இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமலே பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.








      Dinamalar
      Follow us