ADDED : நவ 05, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த அக்., 15க்குள் ஓட்டு திருட்டு தடுப்பு கையெழுத்து இயக்கத்தை முடிக்க திட்டமிட்டு, மண்டலம் வாரியாக ஐவர் குழுவை தமிழக காங்கிரஸ் நியமித்தது. பின், அக்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
கட்சி அமைப்பு ரீதியாக உள்ள, 77 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை, சத்தியமூர்த்தி பவனில் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுதும், 1 கோடியே, 5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக, சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் முன்னிலையில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -:

