sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 முறையான தகவல் தராத அலுவலகம் ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவு

/

 முறையான தகவல் தராத அலுவலகம் ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவு

 முறையான தகவல் தராத அலுவலகம் ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவு

 முறையான தகவல் தராத அலுவலகம் ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : டிச 22, 2025 12:54 AM

Google News

ADDED : டிச 22, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'மனுதாரருக்கு முறையான தகவல் வழங்காத மின்வாரிய அலுவலகம், 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்துார் தாலுகா மேல் சுண்ணாம்புகாலை பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாதன். இவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை கேட்டு, மின் வாரிய பொதுத் தகவல் அலுவலருக்கு, 2023ல் விண்ணப்பித்தார்.

அதில், 'இ - சேவை' மையம் வணிக பயன்பாட்டிற்கு மின் இணைப்பு கேட்டு, 2022, டிச., 18ல் 'ஆன்லைன்' வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவற்றில் நிராகரிக்கப்பட்டவை உட்பட, 19 விதமான தகவல்களை கேட்டிருந்தார்.

15 நாட்களுக்குள் அவருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை. எனவே, மாநில தகவல் ஆணையத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அம்மனு மீது, சமீபத்தில் விசாரணை நடந்தது.

அதில், திருப்பத்துார் மாவட்ட மின் வாரிய பொதுத்தகவல் அலுவலர் ஜைய்னுல் ஆபுதீனுக்கு பதிலாக, திருப்பத்துார் மின் பகிர்மான வட்ட உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் ஆஜரானார்.

அவர் கூறுகையில், 'மனுதாரரர் கோரிய தகவல்கள், ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளன' எனக்கூறி, அதற்கான ஆவணங்களை ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்.

மனுதாரர் கூறுகையில், 'நான் கோரிய தகவல்களுக்கு, தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.

இரு தரப்பினரையும் விசாரித்த பின், மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி பிறப்பித்த உத்தரவு:

பொதுத்தகவல் அலுவலர் வாயிலாக, சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்ததில், மனுதாரருக்கு முறையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது. அவர் கேட்ட தகவல்களை, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

ஜன., 1ம் தேதி உரிய காலத்திற்குள் தகவல் வழங்காமல், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக, திருப்பத்துார் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சார்பில், மனுதாரருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆணையம் சம்மன் விடுத்தும், பொதுத்தகவல் அலுவலர் ஜைய்னுல் ஆபுதீன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது செயலை ஆணையம் கண்டிக்கிறது. அவரது காரண விளக்கம், இழப்பீடு வழங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்களை, ஜன., 1ம் தேதி ஆணையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us