ADDED : டிச 22, 2025 01:18 AM

நியுட்ரன்: என்ன டவுனு, போனவாரம் அப்புக்கு வாய்ப்பிருக்கலாம்னு சொன்னேங்கிறதுக்காக, மூணு நாளைக்கு சந்தையை முழுக் கட்டுப்பாட்டுல வச்சுக்கிட்டீங்க போல! அதுல ஒரு சந்தோசமான விஷயம் என்னன்னா, எனக்கும் ஒரு நாள் வாய்ப்பளிச்சீங்க, அதுதான். ரொம்ப நன்றிங்க.
டவுனு: அப்படியில்லீங்க நியுட்ரன். சந்தை ஒரே திசையில தொடர்ந்து பயணிக்கிறது நல்லது இல்லீங்க. கொஞ்சம் அங்கங்க நின்னு இளைப்பாறிட்டு போறதுதான் நல்லது.
அப்பு: அட. நான் கூட போன வெள்ளிக்கிழமை வந்த செய்திகளைப் பார்த்தா இது டவுனுக்கான வாரமாயிடுமோன்னு நினைச்சேன். ஆனா வெள்ளிக்கிழமை நிலைமை தலைகீழா மாறி எங்க கை ஓங்கிடுச்சு.
நியுட்ரன்: அதான் ஏற்கனவே சொன்னேனே. சமீபகாலத்துல டெக்னிக்கல், செய்தி போன்றவற்றை புறந்தள்ளிட்டு, சந்தை எதிர் திசையில போகுது. எவ்வளவு அனுபவம் இருந்தும் நம்மாலதான் சரியா கணிக்க முடியலியோன்னு கவலைப்படுற அளவுக்கு இது அடிக்கடி நடக்குது. இதுக்கு இதுதான் இம்பாக்ட்டுன்னு உள்ள விஷயங்களையெல்லாம் சந்தை அடிக்கடி உடைக்குது.
டவுனு: வர்ற வாரம் இன்ப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட், எம்3 பணப்புழக்கம், வங்கியில் இருக்கிற டிபாசிட், வழங்கிய கடன் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கு. டியுரபிள் கூட்ஸ் ஆர்டர்ஸ், ஜி.டி.பி., வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு, இண்டஸ்ட்ரியல் மற்றும் மேனுபேக்சரிங் புரொடக்ஷன், சிபி கன்ஸ்யூமர் கான்பிடென்ஸ், ஜாப்லெஸ் க்ளெய்ம்ஸ் (புதியது மற்றும் தொடர்வது) போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்கு.
அப்பு: வருஷ கடைசியாயிடுச்சா. பெரிசா சந்தைய புரட்டிப்போடுற அளவுக்கு தரவுகள் ஏதும் இல்லை போல. டெக்னிக்கலா நிப்டிக்கு 25,780, 25,590, 25,460-ல சப்போர்ட்டும், 26,100, 26,230, 26,350 போன்ற லெவல்ல ரெசிஸ்டென்சும் இருக்க வாய்ப்பிருக்கு. 26,100-ங்கிறது ஸ்ட்ராங்கான ரெசிஸ்டென்ஸா உருவாகீட்டு இருக்குது.
நியுட்ரன்: கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வியாழக்கிழமை சந்தைக்கு விடுமுறைங்கிறதால நாலே நாலு டிரேடிங் தினங்கள்தான் இருக்குது.
டவுனு: டெக்னிக்கல் இண்டிக்கேட்டர்களும் பெரிய மாற்றத்திற்கு உண்டான அளவில் எதையும் காண்பிக்கல. தரவுகளும் பெரிசா ஏதும் இல்லை. வருஷக்கடைசி, விடுமுறை என எல்லாமே உங்களுக்கு சாதகமா இருக்கு நியுட்ரன்.
நியுட்ரன்: ஆமா! இது போன்ற சமயத்தில எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.
டவுனு: கிடைக்கும். ஆனா கிடைக்காது,
நியுட்ரன்: என்னங்க இப்படி கலாய்க்கிறீங்க.
டவுனு: அட! கலாய்க்கலீங்க, என்.எஸ்.இ.,-ல டிசம்பர் எப்&ஓ எக்ஸ்பைரி டிசம்பர் 30 அன்னைக்கு இருக்குது. அதற்குண்டான நகர்வுகளையும் எதிர்பார்க்கலாமுங்கறத அப்படி சொன்னேன்.
அப்பு: இது போக செய்திகளும் சந்தையின் போக்கை ஒரேயடியா மாத்தி விட்டுடும். இது போன்ற நாட்கள்ல செய்திகள் மீது ஒரு கண் எப்போதுமே இருக்கணும்.
டவுனு: ஒரு கண்ணு என்ன ஒரு கண்ணு. ரெண்டு கண்ணும் இருக்கணும்.
நியுட்ரன்: அப்புறம் பேச என்ன இருக்கு? எங்க ஏரியால ஒரு கடையில பணியாரம் நல்லா இருக்கும். வாங்க அங்க போய் பனியாரமும், காபியும் சாப்பிட்டுப் போகலாம்
நியுட்ரன் சொல்ல அப்பு, டவுனு இருவரும் அவருடன் காரில் ஏறி சென்றனர்.

